செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:58 IST)

ஜியோ அறிவித்துள்ள அசத்தல் ஆஃபர்... ஐபில் கிரிக்கெட் கண்டுகளிக்கலாம்...

இந்தியவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உள்ளது ஜியோ நெட்வொர்க் ஆகும். ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ அவ்வப்போது ஆஃபர்கள் கொடுத்து பயனாளிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 499  மற்றும் ரூ. 777 திட்டங்களை அறிமுகப்பட்டுத்தியுள்ளது.

ரூ. 499 என்பது டேட்டா பேக் திட்டம்.  இதில் வாய்ஸ் கால் அனுப்ப முடியாது. 399 ரூபஅய் மதிப்புள்ள டிஸ்னி + ஹாட் ஸ்டார் விஐபியின்1 ஆண்டு சந்தாவைப் பெறலாம் அத்துடன் 56 நாட்களுக்கு 15 ஜிபி  அளவுள்ள இலவச டேட்டா நன்மைகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரூ 777 என்பது ஒரு காம்போ திட்டம் ஆகும். இதில் வாய்ஸ்கால், இதில் கிரிக்கெட் சலுகைகளைக் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக இந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஐபிஎல் சீசனை ஹாட் ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஹாட் ஸ்டார், விஐபியின் 1 ஆண்டு கால சந்தாவை இலவசமாக பெறலாம் அத்துடன் 15 ஜிபி டேட்டா தரவு மற்றும் 5 ஜிபி டேட்டா கால் செய்து கொள்ளும் வசதி,  ஒரு நாளைக்கு 100 எஸ்.எம். வசதிகளை 84 நாட்கள் பெறலாம்.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களை இதில் இலவசமாக  காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.