புதிய ரீசார்ஜ் அப்ஷனை வழங்கிய ஜியோ: பயனர்களுக்கு என்னென்ன கிடைக்கும்?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையை அறிமுகம் செய்திருக்கிறது.
ஆம், ரூ. 598 விலையில் aறிமுகமாகியுள்ள இந்த ரீசார்க் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ அல்லாத எண்களுக்கு 2000 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது.
56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஐபிஎல் ரசிகர்களுக்கும் ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.