தொடர்புடைய செய்திகள்
- ’மத்திய பட்ஜெட்’ மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது - கமல்ஹாசன் ’டுவீட்’
- எல்லாமே வெறும் பேச்சு தான்; பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி
- வேலை வாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை - ராகுல் காந்தி விமர்சனம் !
- பட்ஜெட்டால் படுத்ததா பங்குச்சந்தை!!
- பொன் முட்டையிடும் வாத்தை அறுக்காதீர்கள்! – பட்ஜெட் குறித்து ராமதாஸ் கவலை!
பிக்ஸட் டெபாசிட்… வங்கி திவாலானால்? 5 லட்சம் கியாரண்டி !
வங்கிகளில் நாம் வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட் கியாரண்டி தொகை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நடுத்தர மக்களின் மிகப்பெரிய மற்றும் நம்பிக்கையான முதலீடு என்றால் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவது. இந்த டெபாசிட்களுக்கு ஆண்டுகளுக்கு ஏற்ப வட்டிவிகிதம் அளிக்கப்படும். உதாரணமாக 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டு டெபாசிட்டை விட வட்டி அதிகம். அதேப் போல நீங்கள் டெபாசிட் செய்த வங்கி திவாலானால் அரசு டெபாசிட் செய்தவர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக ஒரு லட்ச ரூபாய் வரைத் தரும்.
ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த குறைந்த பட்ச தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெபாசிட் செய்பவர்கள் அதிகளவில் பயனடைவார்கள்.
அடுத்த கட்டுரையில்
