வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (10:57 IST)

பண்டிகை சீசன் வருதுல்ல..! தமிழில் ஆப்ஷன் குடுத்த அமேசான்!

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் விற்பனையை அதிகரிக்க இந்திய வட்டார மொழிகளிலும் தனது அப்ளிகேசனை விரிவுப்படுத்தியுள்ளது அமேசான்.

இந்தியாவில் ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமேசான். ஆண்டுதோறும் விழாக்காலங்களில் சிறப்பு தள்ளுபடி போன்றவற்றை அதிகமாக வெலியிட்டு வருகிறது அமேசான். இதனால் பண்டிகை காலங்களில் மட்டும் அமேசான் வர்த்தகம் அதிகமாக இருக்கும். தற்போது விழாக்காலம் நெருங்கி வரும் நிலையில் விழாக்கால விற்பனைக்கு தயாராகி வருகிறது அமேசான்.

இதுவரை அமேசான் அப்ளிகேசனில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது புதிதாக தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளை இணைத்துள்ளது அமேசான். இதனால் மாநில மொழிகள் மட்டுமே தெரிந்தோரும் எளிதில் அமேசான் செயலி மூலம் தாங்கள் விரும்பிய பொருட்களை பெற முடியும். இதனால் விழாக்காலங்களில் மேலும் பலர் பொருட்கள் வாங்குவார்கள், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.