1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:10 IST)

ப்ளே ஸ்டோரில் பேடிஎம் நீக்கம் – பயனாளர்கள் அதிர்ச்சி

கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசன் நீக்கப்பட்டுள்ளது பேடிஎம் பயனாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தியாவில் பண பரிவர்த்தனைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேசனான பேடிஎம் கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தலைமையகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பேடிஎம் அப்ளிகேசன் பல மில்லியன் மக்களால் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூகிள் சட்டத்திட்டங்களை மீறி செயல்பட்டதாக பேடிஎம் மீது நடவடிக்கை எடுத்துள்ள கூகிள் தனது ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசனை நீக்கியுள்ளது. சூதாட்டம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பேடிஎம் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பேடிஎம் நிறுவனத்தின் மற்ற ஆப்களான பேடிஎம் மால், பேடிஎம் மியூச்சுவல் பண்ட் போன்ற அப்ளிகேசன்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.