அமேசான் vs ப்ளிப்கார்ட்: 3 பில்லியன் டாலர் இழப்பு!
இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் அமேசான் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வெளிநாட்டு வணிகம் 919 மில்லியன் டாலர்.
குறிப்பாக அமேசான் பிரைம் சேவை வேகமாக வளர்ந்து வருகிறது. 2016-ல் பிரைம் சேவைக்கு ரூ.499 கட்டணம் வசூலித்து வந்த நிலையில், 2017-ல் ரூ.999 ஆக உயர்த்தியது. கடந்த ஆண்டு பிளிப்கார்ட் ஜப்பானின் சாப்ட் பேங்க்கிடம் இருந்து 4 பில்லியன் டாலர் முதலீடு பெற்றது. அமேசான் நிறுவனம் இந்தியா பிரிவுக்காக ரூ.8,150 கோடியை முதலீடு செய்தது.
ப்ளிப்கார்ட்டுடன் போட்டி போட்டு செயல்படுவதால் அமேசான் நிறுவனத்திற்கு 2016 ஆம் ஆண்டு 1.28 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது 2017 ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலர் நஷ்டம். இருப்பினும் இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.