அதிரடி விலைகுறைப்பில் விற்பனையாகும் ஐபோன் 8!

gadget
Last Updated: திங்கள், 1 ஜனவரி 2018 (14:35 IST)
தற்சமயம் அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் ஐபோன் 8 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் பிரியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். பலர் இந்த சந்திரப்பத்தைப் பயன்படுத்தி செல்போன்களை வாங்கி வருகின்றனர்.
அமேசானில் ஐபோன் 8 மாடலுக்கு ரூ.9000-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.54,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைல் போனின் சிறப்பம்சங்களைப் பற்றி பார்ப்போம்.
 
4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்பிளே(Retina HD Display) வடிவமைப்பைக் கொண்டுள்ளது, 1334x750 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
 
ஏ11 பயோனிக் சிப்செட்(A11 Bionic processor) மற்றும் ஐஒஎஸ் 11 இயங்குதளத்தை(IOS 11 Operating system) அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
 
64ஜிபி மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியைக்(64 and 256 GB internal memory) கொண்டுள்ளது. 1960எம்ஏஎச்(1960 Mah battery) பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது. 
 
12எம்பி பிரைமரி கேமரா மற்றும் 7எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது,  எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற வசதியும் அடங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :