வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2018 (20:32 IST)

ஆளில்லாத அமேசான் சூப்பர் மார்க்கெட்: ப்ளான் என்ன??

அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை சியாட்டில் நகரில் அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஆண்டு காலமாக இந்த திட்டத்திற்கான சோதனை நடைபெற்று வந்தது. 
 
சூப்பர் மார்க்கெட்டில் பணியாளர்கள் இல்லாமல், பில் போட வரிசையில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க இந்த திட்டத்தில் அமேசான் வழிவகுத்துள்ளது. மேலும், சூப்பர் மார்க்கெட் முழுவதும் கேமரா மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. 
 
இந்த கேமராக்கள் மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்ள்ளவும், வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்யவும் பயன்படுகிறது. 
 
அதேபோல், வாடிக்கையாளர்கள் வெளியே செல்லும் போது வாங்கிய பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதற்கு முன்னர் அமேசான் கோ என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்கள் கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்வது அவசியம்.