திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (15:36 IST)

பாபா ராம்தேவின் அடுத்த இலக்கு: சிக்கிய அமேசான், ப்ளிப்கார்ட்...

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தனது பொருட்களை ஆன்லைன் வாயிலாக பெருமளவில் விற்பனை செய்ய திட்டமிட்டு அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற முன்னணி ஆன்லைன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
பதஞ்சலி நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சவால் விடும் வகையில் அதிக அளவில் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நூடுல்ஸ், தேன், நெய், எண்ணெய், அழகு சாதன பொருட்கள், பூஜை சாமான்கள் என பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது. 
 
ஆன்லைன் மூலம் பதஞ்சலி பொருட்கள் விற்பனையில் இருந்தாலும், அவை முறையானதாக இல்லை. எனவே, முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் வாயிலாக தனது பொருட்களை விற்பனை செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி எடுத்துள்ளது. 
 
அதன்படி அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால், 1 எம்ஜி, பிக்பாஸ்கெட், குரோபெர்ஸ், ஷாப்குளூஸ் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய எட்டு தளங்களின் வாயிலாக பதஞ்சலி நிறுவனம் தனது பொருட்களை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.