1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. ulagam sutrum valiban actress comitted sucide

உலகம் சுற்றும் வாலிபன் பட நடிகை தற்கொலை - எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இரங்கல்

meta
எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்து 1973ம் வருடம் வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் காட்சிகளை தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று எம்.ஜி.ஆர் எடுத்தார்.

அப்படி வெளியான உலகம் சுற்றும் வாலிபன் வசூலை வாரிக்குவித்து எம்.ஜி.ஆருக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இந்த படத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற பாடலில் எம்ஜிஆருடன் இணைந்து நடனமாடியவர் தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத்.

தற்போது அவருக்கு 83 வயதான நிலையில் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், பாங்காக்கில் உள்ள தனது வீட்டில் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒத்துக்குறேன்.. இதுதான் தோல்விக்கு காரணம்.. ஆனாலும் ஃபீல் பண்ணமாட்டேன் - அடங்காத டிரம்ப்...