1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
  4. Madurai Aadeenam passed away this is the new Aadeenam

மதுரை ஆதீனம் மறைவு ..புதிய ஆதினம் இவர்தான்

madurai aadhenam
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும்.

 மதுரை ஆதீனம்(77) சுவாசக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள பிரபல அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு  ஐசியுவின் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.  இந்நிலையில்  இன்று அவர் உயிரிழந்தார்.

மதுரை ஆதீனமாக இருந்த போதிலும் அவர் அவ்வப்போது அரசியல் கருத்துகளையும் கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து !!