சாரே ஜஹாசே சேலஞ்ச்..இணையதளத்தில் டிரெண்டிங்
இந்தியா சுதந்திரம் பெற்று நாளையுடன் 75 ஆண்டுகள் ஆகிறது. எனவே 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒன்றான இந்தியாவைச் சேர்ந்த ஷேர் சாட்-ல் தற்போது ஒரு புதிய சேலஞ்ச் வைரலாகி வருகிறது.
அதாவது. சிறியோர் முதல் பெரியோர் வரை யார் வேண்டுமானாலும் சாரே ஜஹாசே சேலஞ்சில் கலந்துகொண்டு தம் நாட்டு பற்றினை வெளிப்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளதால் பலர் இதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் கலந்துகொண்டு வீடியோ பதிவிடுபவர்களுக்கு பரிசுகள் அளிப்பதாகவும் கூறியுள்ளது