1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
  4. Heavy rain in many districts! Postponement of University Examinations

பல மாவட்டங்களில் கனமழை! பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

Heavy Rain in Tamilnadu
இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த தென் மாவட்ட அதி கனமழைக்கு பிறகு பெரும்பாலும் குறைவான அளவே மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இன்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், புதுச்சேரி என பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
சாராயம் வாங்கி குடிக்க குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தை; அதிர்ச்சி சம்பவம்!