வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (18:40 IST)

புயல் காரணமாக அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

anna university
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் மறுநாள்  நடைபெறவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

'மிக்ஜாம்' புயல் கரையை கடக்கும் நாளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனவே மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4,5ஆம் தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்  என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதையடுத்து,  சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்கும்படி  மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை 144 ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு  மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் மறுநாள்  நடைபெறவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

தொலைதூர கல்வித் திட்டத்தில் நடைஒபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.