முதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது - ஓ. பன்னீர் செல்வம்

panner selvam
சினோஜ்கியான்| Last Updated: திங்கள், 16 செப்டம்பர் 2019 (19:58 IST)
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர், கட்சியில் பல்வேறு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டது. அதையெல்லாம் தாண்டி இருபிரிவாக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் ஓரணியில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிவந்தன. 
 
குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வெளிநாடு பயணத்தின் போது, முதல்வர் பொறுப்பை துணைமுதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீ செல்வத்திடம் கொடுக்காமல் சென்றதாகவும் தகவல்கள் வெளியானது. இது இருவருக்கிடையே ஊடல்கள் இருப்பதற்கான அடையாளமாகவே எதிர்க்கட்சியினராகும் பரப்பப்பட்டது. 
 
ஆனால் வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த முதல்வரை ஒ. பன்னீசெல்வம் மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தார். இந்த நிலையில், இன்று துணைமுதல்வர் ஒ. பன்னீர் செல்வம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து, எதிர்கட்சி கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார். திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சிகள் கேட்ட வெள்ளை அறிக்கைக்கு இதுவறை பதிலில்லை என கூறினார். 
மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் என்னையும் பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :