வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (20:10 IST)

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு: மிரட்டல் கடிதத்ததால் பரபரப்பு

செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்' என உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவரிடம் இருந்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று சற்றுமுன் வந்துள்ளதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த கடிதத்தில் தான் ஒரு மாநிலத்தில் இருப்பவர் அல்ல என்றும் இந்தியா முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பவர் என்றும், தன்னுடைய மொபைல் எண்ணை தினமும் மாற்றி வருவதாகவும் ஹதர்ஷன்சிங் நாக்பால் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.
 
 
இந்த கடிதத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடிதம் வந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்கள் சென்னை காவல்துறைக்கும் மத்திய பாதுகாப்புப்படை தலைமை பதிவாளருக்கும் இந்த கடிதத்தை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து இந்த கடிதம் குறித்த விசாரணை தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவ்ந்துள்ளது
 
 
இந்த கடிதத்தின் முகவரியை ஆய்வு செய்து வரும் சென்னை போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த கடிதம் டெல்லி முகவரியில் இருந்து வந்திருப்பதாக கூறப்படுவதாலும், மிரட்டல் விடுத்த நபர் டெல்லியை சேர்ந்தவர் என்பதாலும் டெல்லி போலீசாரிடமும் சென்னை போலீசார் ஆலோசனை செய்யவுள்ளனர்.