1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor sarathkumar appreciate toxic movie

டாக்சிக் படம் வேறவெவல்!.. பாராட்டி தள்ளிய சரத்குமார்!....

toxic
கே.ஜி.எப், கே.ஜி.எப் 2 ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் யஷ். தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம்தான் டாக்சிக். இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் ஆகியோர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தனர். கடந்த கடந்த வாரம் புதன்கிழமை இந்த திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது...

யஷ்ஷுக்கு ஏராளமான் ரசிகர்கள் இருப்பதால் முதல் நாள் இந்த படத்திற்கு வரவேற்பு இருந்தது.. ஆனால் முதல் காட்சிக்கு பின்னர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் வசூல் படிப்படியாக குறைந்தது.. சுமார் 800 கோடி பட்ஜெட்டில் உருவான டாக்சிக் திரைப்படம் தற்போது வரை 300 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தை தயாரித்த வகையில் தயாரிப்பாளருக்கு ரூ.700 கோடி வரை நஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான், டாக்சிக் திரைப்படத்தை நடிகர் சரத்குமார் பாராட்டி பேசியிருக்கிறார். இயக்குனர் கீது மோகன்தாஸ் தனது கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் காட்சிகளை உருவாக்கியிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. குறிப்பாக கடினமான காட்சிகளையும் யஷ் மிகவும் இயல்பாக கையாண்டிருக்கிறார்..

படத்தின் உச்சகட்ட காட்சியில் அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. தொழில் நுட்ப அம்சங்கள் மற்றும் காட்சி அமைப்புக்காக அனைவரும் டாக்சிக் படத்தை பார்க்க வேண்டும்’ என அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய் அண்ணன் எல்லாத்தையும் பாத்துப்பாரு.. கார்த்தி கொடுத்த பேட்டி!...