தொடர்புடைய செய்திகள்
- தயவுசெய்து ரிட்டயர் ஆகாதீங்க: தோனிக்கு 89 வயது பாடகி வேண்டுகோள்!
- நாட் பாலில் ரன் அவுட் ஆன தோனி: ஐசிசி விதிகளை மீறிய அம்பயர்கள்...
- இந்திய அணியின் தோல்வியால் ஆத்திரம்: வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள்
- தோனியை ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறக்கியது ஏன்? விராத் கோஹ்லி பேட்டி
- ஏமாற்றம் தரும் முடிவு: இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி
பெண்ணிடம் அத்துமீறிய கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு விளையாட தடை !
இங்கிலாந்தில் தற்போது உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நம் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் தற்போது அரையிறுதியில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியினர் சிறப்பாக விளையாடி, மிகப் பெரிய அணிகளுக்கு டப் கொடுத்தனர். தற்பொது ஆப்கானிஸ்தான் வீரர் அப்தாப் ஆலம் மீது ஒரு பெண் புகார் அளித்த நிலையில் அவருக்கு ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அப்தாப் ஆலம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் கொடுத்து 1விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் ஒரு பெண்ணிடம் அப்தாப் தவறாக நடக்க மூயன்றதாக புகார் எழுந்ததை அடுத்து, ஐசிசி கிரிக்கெட் வாரியம் அப்தால் ஆலம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது அப்தாபிடம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் விசாரணை நடத்தியது இதில் அப்தால் மீதான குற்றம் நிரூபிக்கப்ட்டதால் அவருக்கு ஒராண்டுக்கு விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.