ஏமாற்றம் தரும் முடிவு: இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி

Last Modified புதன், 10 ஜூலை 2019 (20:15 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வென்று இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றே பல கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தனர். ஆனால் வல்லுனர்களின் கணிப்பு பொய்யாகி இன்று நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியாவின் தோல்வி கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் கடைசிவரை வெற்றிக்காக போராடிய தோனி மற்றும் ஜடேஜாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த பாரத பிரதமர் நரேந்திரமோடி, 'இறுதிவரை போராட்ட குணத்துடன் இந்திய அணி விளையாடிய போதிலும் முடிவு ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதிலும் இந்திய அணியினர் சிறப்பாக பந்துவீசினர், சிறப்பாக பேட்டிங் செய்தனர் என்று கூறியுள்ளார்.
அதேபோல் ராகுல்காந்தி இதுகுறித்து கூறியபோது, 'இன்று கோடிக்கணக்கானவர்களின் இதயம் நொறுங்கிவிட்டது. இருப்பினும் இந்திய அணியின் போராட்டம் மரியாதைக்குரியது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். உலகக்கோப்பையை வெல்லவும் வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :