வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (21:30 IST)

தோனியை ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறக்கியது ஏன்? விராத் கோஹ்லி பேட்டி

இன்றைய உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் முதல் மூன்று விக்கெட்டுக்கள் ஐந்து ரன்களில் இழந்த நிலையில் அதனையடுத்து ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டுக்கள் விரைவில் விழுந்தன. இந்த நிலையில் 6வது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் விராத் கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்கிவிட்டார். 
 
ஐந்து விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் நிலைத்து நின்று ஆடும் அனுபவ ஆட்டக்காரர் ஒருவர்தான் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், கோஹ்லியின் முடிவு தவறு என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். தோனி 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கி ஓரளவு நிலைத்து நின்றிருந்தால் கடைசி கட்டத்தில் பாண்ட்யா இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார், இந்தியாவும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு உண்டு என்றே பலர் கருத்து தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் தோனியை ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறக்கியது குறித்து கருத்து தெரிவித்த விராத் கோஹ்லி, 'ஆட்டத்தை சிறப்பான முறையில் முடிப்பார் என்ற நோக்கத்தில் தான் தோனியை 7 வது இடத்தில் களம் இறக்கினோம் என்று கூறியவர் மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தோம் என்றும் தெரிவித்தார். மேலும் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது ஏமாற்றம் தருவதாக கூறிய கோஹ்லி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மைதானம் இருந்தது என்றும் தெரிவித்தார்.