ஓய்வு இப்போது இல்லை – முடிவை மாற்றிக்கொண்ட கெய்ல் !

Last Modified வியாழன், 27 ஜூன் 2019 (12:47 IST)
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பைத் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட்டில் உள்ள ஒரு சிலக் கிரிக்கெட்ட்டர்களுக்கே சொந்த நாடுகளைத் தாண்டியும் அனைத்து நாட்டிலும் அனைத்து வயதிலும் ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஜாம்ப்வான் கிறிஸ் கெய்ல். தற்போது 39 வயதாகும் கிறிஸ்கெய்ல் கடந்த பிப்ரவரி மாதம் உலகக்கோப்பை தொடருக்குப் பின் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று இந்திய அணியுடனானப் போட்டியை முன்னிட்டு நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அதில் ‘உலகக்கோப்பை முடிவல்ல. இன்னும் ஒரு தொடர்கூட விளையாடலாம். யாருக்குத் தெரியும் என்ன நடக்குமென்று. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நான் விளையாடலாம். ஆனாக் டி 20 தொடரில் நான் விளையாட மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கெய்லின் இந்த முடிவை உறுதிப்படுத்துவது போல அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு எதிரானத் தொடரில் கெய்ல் விளையாடுவார் எனக் கூறியுள்ளார். இதனால் கெய்ல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :