வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (17:44 IST)

ஓய்வு முடிவைத் திரும்பப் பெறுகிறார் கெய்ல் ? – அடுத்தடுத்த சதத்தால் திடீர் முடிவு !

உலகக்கோப்பைக் கிரிக்கெட்டோடு சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக இருந்த கிறிஸ் கெய்ல் இப்போது அந்த முடிவைத் திரும்பப் பெறும் யோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.

சர்வெதேசக் கிரிக்கெட்டில் உள்ள ஒரு சிலக் கிரிக்கெட்ட்டர்களுக்கே சொந்த நாடுகளைத் தாண்டியும் அனைத்து நாட்டிலும் அனைத்து வயதிலும் ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஜாம்ப்வான் கிறிஸ் கெய்ல். தற்போது 39 வயதாகும் கிறிஸ்கெய்ல் மே மாதம் தொடங்க இருக்கும் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஓராண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த இரண்டுப் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தாலும் கெய்ல் அடுத்தடுத்து இரண்டுப் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதிலும் இந்த இரண்டுப் போட்டிகளில் மட்டும் அவர் 26 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது ரசிகர்களையும் விமர்சகர்களையும் மலைக்க வைக்கிறது.

இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசியுள்ள கெய்ல் ‘நான் கடந்த சில மாதங்களாக டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறேன். அதனால் 50 ஒவர்கள் போட்டி கடினமானது என எண்ணினேன். ஆனால் என் உடல் மாறிவிட்டது. இன்னும் கொஞ்சம் பயிற்சி மேற்கொண்டு உடலை கனகச்சிதமாக மாற்றி விட்டேன் என்றால், ‘இன்னும் சில காலம் நீங்கள் கிறிஸ் கெய்ல்’ ஆட்டத்தைப் பார்க்கலாம். என் உடல் இன்னும் 2 மாதங்களில் முழு ஃபிட் ஆகிவிடும். என் உடலுக்கு என்ன ஆனது? … இப்போது 40 வயதை நெருங்குகிறேன்.. ஓய்வு அறிவிப்பை கைவிடலாமா ? பார்ப்போம், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து பார்ப்போம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கெய்ல் தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு இன்னும் சில ஆண்டுகள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவர் என வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.