கடந்த போட்டியில் தட்டு தடுமாறிய இந்தியா: இன்று வெஸ்ட் இண்டீஸிடம் சீறுமா?

Last Updated: வியாழன், 27 ஜூன் 2019 (09:59 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா தனது 6வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. 
 
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2 வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும், 4 வது போட்டியில் பாகிஸ்தானை 89 ரன் வித்தியாசத்திலும், 5 வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 11 ரன்னிலும் தோற்கடித்தது. நியூசிலாந்துக்கு எதிரான 3 வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
 
அந்த வகையில் இன்று தனது 6வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸுடன் மோத உள்ளது. இந்தியா தரப்பில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களும் பலம் பொருந்தியுள்ளனர். 
கடந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தானுடன் தட்டு தடுமாறி விளையாடி இந்திய இந்த போட்டியில் எந்த தடுமாற்றமும் இன்றி விளையாடும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 
 
அதேபோல், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் இந்திய அணி வீரர்கள் கவனத்துடன் விளையாடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம். 
 
வெஸ்ட் இண்டீஸுடனான இந்த ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிரா போர்ட் மைதானத்தில் இந்திய நேரடிப்படி மாலை 3 மணிக்கு துவங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :