1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. Andhra Pradesh Deputy CM Pawan Kalyan and Wife Anna Konidela Announce Separation After 13 Years of Marriage

3வது மனைவியையும் பிரிந்தார் துணை முதல்வர் பவன் கல்யாண்.. நண்பர்களாக இருப்போம் என அறிவிப்பு...

Pawan Kalyan
ஆந்திர துணை முதலமைச்சரும் பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா கொனிடேலா ஆகிய இருவரும் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு பரஸ்பரம் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த முடிவை இருவரும் இணைந்து எடுத்ததாகவும், தொடர்ந்து நல்ல நண்பர்களாகவும் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோராகவும் இருப்போம் என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 
முன்னாள் மாடலான ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை பவன் கல்யாண் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார். 2011-ல் வெளியான 'டீன் மார்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. இந்த தம்பதியினருக்கு பொலேனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் பவனோவிச் என்ற மகனும் உள்ளனர்.
 
பவன் கல்யாணுக்கு இது மூன்றாவது திருமணமாகும். இதற்கு முன்பு நந்தினி மற்றும் நடிகை ரேணு தேசாய் ஆகியோரை திருமணம் செய்து பிரிந்த நிலையில், தற்போது அன்னாவுடனான மணவாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தனிப்பட்ட முடிவை மதித்து தங்களின் தனியுரிமைக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என தம்பதியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
எம்.ஜி.ஆர் தலைப்பில் நடிக்கும் சூர்யா!.. அவர் காட்டுல மழைதான்!...