1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. pawan kalyan fan passed away on electric shock

பவன் கல்யாணுக்கு பிளெக்ஸ் போர்டு!. மின்சாரம் தாக்கி ரசிகர் அதிர்ச்சி மரணம்..

pawan kalyan
தெலுங்கு நடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சிரஞ்சீவி, அவரின் மகன் ராம்சரண், புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ், பவன் கல்யாண், பாலையா என்கிற பாலகிருஷ்ணா ஆகிய நடிகர்களுக்கு அங்கே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்..

அந்த நடிகர்களின் படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் தியேட்டரில் பிளக்ஸ் வைப்பது, பேனர் கட்டுவது, கட்அவுட் வைப்பது என திருவிழா போல அவர்கள் கொண்டாடுகிறார்கள். சில சமயங்களில் அங்கு விபத்து நடந்து உயிரிழப்புகளும் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில்தான், பவன் கல்யாணின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பிளக்ஸ் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த சம்பவம் அமலாபுரம் என்கிற இடத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு அருகே நடந்திருக்கிறது..

உயிரிழந்த பிரேம்குமார் பவன் கல்யாணின் தீவிர ரசிகர். ஹைதராபாத்தில் பணிபுரிந்து வருகிறார். பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனது சொந்த கிராமத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தளபதி படம் பார்த்து பேரை மாத்திக்கிட்டேன்!.. சூரி பேட்டி....