திங்கள், 26 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:00 IST)

இதை செய்தால் உம்ரான் மாலிக் அணியில் இடம்பிடிக்கலாம்… ஜாகீர்கான் ஆலோசனை!

இதை செய்தால் உம்ரான் மாலிக் அணியில் இடம்பிடிக்கலாம்… ஜாகீர்கான் ஆலோசனை!
உம்ரான் மாலிக் இந்தியா சார்பில் தற்போது அதிவேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளராக உருவாகியுள்ளார்.

கடந்த ஆண்டே தனது அதிவேகப் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் மெருகேறி பேட்ஸ்மேன்களை திணறவைத்து வருகிறார்.  இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகள் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவரால் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கவில்லை.

அதையடுத்து இப்போது நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார். அவர் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்க ஜாகீர் கான் ஆலோசனைக் கொடுத்துள்ளார். அதில் “நியுசிலாந்து போன்ற ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியும். நான் முதன் முதலில் நியுசிலாந்தில்தான் 5 விக்கெட்கள் கைப்பற்றினேன். அதனால் அவர் இந்த தொடரில் நிறைய விக்கெட்கள் வீழ்த்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.