கோவாக்ஸின் தயாரிப்பில் அரசியல் அழுத்தம்?? பாரத் பயோடெக் விளக்கம்!
வெளிப்புற அழுத்ததால் (அரசியல் அழுத்தம்) கோவாக்ஸின் தடுப்பூசியை தயாரிப்பா? என்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்.
உலகத்தையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி தயாரிக்க உலக நாடுகள் முடுக்கிவிடப்பட்டிருந்த காலத்தில் இந்தியாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உள்நாட்டு தயாரிப்பாக தயாரித்து மக்களுக்கு செலுத்தப்பட்டது. இது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோவாக்ஸின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு வெளிப்புற அழுத்தம் எதுவும் இல்லை. கோவிட்-19 தொற்றுநோய்க்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்க, இந்தியாவிலும் உலக அளவிலும் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றுவதற்கான அழுத்தம் அனைத்தும் உள்நாட்டில் இருந்தது.
கோவாக்சின் என்பது உலகளவில் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளில் ஒன்றாகும். மேலும் இது மூன்று சவால் சோதனைகள் மற்றும் ஒன்பது மனித மருத்துவ ஆய்வுகள் உட்பட தோராயமாக 20 முன் மருத்துவ ஆய்வுகளில் மதிப்பீடு செய்யப்பட்டது என தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Edited By: Sugapriya Prakash