தொடர்புடைய செய்திகள்
- ரஜினி, தோனி முதல் ஜான் சீனா வரை… ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள்!
- இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!
- 15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்ஷி தம்பதி!
- பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?
- என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!
யுவ்ராஜ் சிங்கின் ஆல்டைம் ஒருநாள் அணியில் தோனிக்கு இடமில்லையா?... ரசிகர்கள் அதிருப்தி!
கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.
ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஓய்வு பெற்ற வீரர்களுக்கான உலகக் கோப்பை தொடரை அவர் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்நிலையில் அவரிடம் ஆல்டைம் பேவரைட் ஒருநாள் அணியை தேர்வு செய்ய சொல்லப்பட்டது. அவர் தேர்வு செய்த அணியில் இந்திய வீரர்கள் மூவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. மேலும் தன் பெயரையும் சேர்க்காத யுவ்ராஜ் தன்னை 12 ஆவது வீரராக அறிவித்துள்ளார்.
யுவ்ராஜின் கனவு ஒரு நாள் அணி:-
சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ பிளின்டாஃப், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் மற்றும் க்ளென் மெக்ராத்.
சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ பிளின்டாஃப், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் மற்றும் க்ளென் மெக்ராத்.
அடுத்த கட்டுரையில்