ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2024 (08:33 IST)

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

MS Dhoni
உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



நேற்று நடந்த உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்திருந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியை சேஸிங்கில் 169 ரன்களில் மடக்கி இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எம்.எஸ்.தோனி “என் இதயத்துடிப்பு அதிகரித்தது. தன்னம்பிக்கை மற்றும் நிதானத்துடன் சிறப்பாக விளையாடினீர்கள். உலகக்கோப்பையை தாயகம் கொண்டு வரும் உங்களுக்கு அனைவரின் சார்பாகவும் பெரிய நன்றிகள். எனது பிறந்த நாளுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K