1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (15:56 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் : இந்தியா முதலிடம்

india
2023-2025 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஸஸ் தொடரில் இருந்து தொடங்கியது.
 
இந்த நிலையில் இத்தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தனது முதல் தொடக்க ஆட்டம் ஆடியது.
 
2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.1 போட்டி டிரா ஆனது. அதன்பிறகு இந்தியா அணி டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை.
 
இதற்கிடையே பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. இதில்,ஆஸ்திரேலியா வென்றது.
 
இந்த நிலையில், 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 66.67 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது. பாகிஸ்தான் 2 வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 41.67 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.