1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (18:37 IST)

தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி

dawood ibrahim
தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவரும், தாதாவுமான தாவூத் இப்ராகிம்  இரண்டு  நாட்களுக்கு முன்னதாக கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், அவர் அனுமதிக்கப்பட்ட தளத்தில் வேறு எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை எனவும், அந்த மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
தாவூத் இப்ராகிம் 2 வது  திருமணம் செய்து கொண்டு கராச்சியில் தங்கியிருப்பதாக அவரது சகோதரர்  என்.ஐ.ஏவிடம்  கூறியிருந்த நிலையில், தாவூத் இப்ராகிமுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகிறது.