திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (15:09 IST)

இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது 
 
 இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 186 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. 
 
இந்த நிலையில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி  முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அந்த அணிக்கு வெற்றி பெற 479 ரன்கள் இலக்காக அளிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது 
 
இதனை அடுத்து இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில்  இந்திய மகளிர் அணி வீழ்த்தியதை அடைப்பு அந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
Edited by Mahendran