வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (14:53 IST)

360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி.. ஆஸ்திரேலியா அபாரம்..!

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. '
 
பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் கடந்த 14ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் எண்ணிக்கையில் 487 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களும் எடுத்தது. 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற 450 ரன்கள் இலக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் அபார பந்து பேச்சை தாக்குபிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி வெரும் 89 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை அடுத்து ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில்  63 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
 
Edited by Siva