செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 18 பிப்ரவரி 2023 (21:17 IST)

உலகக் கோப்பை டி-20 : இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு!

India Pakistan
பெண்கள் உலகக் கோப்பை டி-20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

தென்னாப்பிரிக்க நாட்டில், பெண்கள் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

கடைசிப் போட்டியில்  இந்திய பந்து வீச்சாளர் தீபக் சர்மாவின் சுழலில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது..

இந்த நிலையில், இன்றைய போட்டியில் குரூப் 'பி '-ல் இடம்பெற்றுள்ள, இந்திய அணி  இங்கிலாந்துடன் மோதுகிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

இருபினும், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி சார்பில், ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா , ஹிகா தலா 1 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.