வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (16:28 IST)

104 ரன்களுக்கு ஆல் அவுட் –ஊதித் தள்ளிய இந்திய பவுலர்கள்

இந்தியா மற்றும் மே.இ.தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

டாஸ் வென்ற முதலில் பேட் செய்த வெஸ் இண்டீஸ் முதல் இரண்டு ஓவர்களிலேயே தனது தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னரும் இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலை தாங்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினர். அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 25 ரன்களும், மார்லன் சாமுவேல்ஸ் 24 ரன்களும்  மற்றும் ஷேய் ஹோப் 16 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் அந்த அணி 31.5 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்ப்பில் ஜடேஜா 4 விக்கெட்,, பூமரா மற்றும் கலீல் அஹமது தலா 2 விக்கெட், புவானேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிவரும் இந்தியா அணி 3 ஓவர்கள் முடிவில் 14 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியாவின் ஷிகார் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது கோஹ்லியும் ரோஹித்தும் விளையாடி வருகின்றனர்.