1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (17:39 IST)

அமெரிக்காவில் இந்திய தம்பதியர் பலி!

அமெரிக்காவில் பணியாற்றிவந்த விஷ்வந்த்க்கும் மீனாட்சி மூர்த்திக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து இருவரும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்துள்ளனர்.அதன் பின்விஷ்வந்திற்கு பணிமாறுதல் வந்ததன் நிமித்தம் அவர்கள் சான்பிரான்சிஸ்கோவிற்கு சென்று வசித்துள்ளனர். இருவருமே மகிழ்சியான தம்பதிகள் என்று அவர்களின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள யோஸ்மியாட் பூங்காவிற்கு இருவரும் சுற்றுலா  சென்றுள்ளனர் இருவருமே இந்த சுற்றுலாவில் ஆர்வம் இருந்து வந்ததால் அவர்கள் இந்த பகுதிக்கு சென்று புகைபடமும் எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும்  கடைசியாக சென்ற இடம் இதுதான்.
 
ஆனால் சில நாட்கள் கழித்த பின் அலுவலகத்திற்கு விஷ்வந்த் வராததால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் பதிலில்லாததால் சந்தேகம் அடைந்தனர்.
 
இந்நிலையில் ஒரிரு நாட்களுக்கு முன் அந்த பகுதியில் சுற்றுலா சென்றவர் இருவரது உடல்கள் இறந்து கிடந்துள்ளதைப் பார்த்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
 
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்திய தம்பதியினர் இறப்பு குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
 
இந்தியாவிலுள்ள தம்பதியினரின் உறவினர்கள் சோகத்தில் தவிக்கின்றனர்.