1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (15:55 IST)

நமக்கு சிலை அவர்களுக்குப் பாலம் – சீனர்களின் உண்மையான தேசபக்தி

உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமை பெற்றிருக்கும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை உருவாக்கத்தில் சீனாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

சுதந்திர இந்தியாவை கட்டமைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீ உயரமுள்ள சிலை அமைக்கும் பணி 33 மாத காலத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

இந்த சிலை அமைக்க இந்திய அரசு செலவிட்டிருக்கும் மொத்த தொகை ரூ 2982 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு அதிகமான செலவில் இந்தியாவிற்கு இப்போது ஒரு சிலை தேவைதானா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த சிலை அமைக்கும் பணியில் பெரும்பகுதி சீனாவில் நடைபெற்றது. சிலைக்கு வேண்டிய வெண்கல பூச்சுகளை செய்யும் வசதிகள் இந்தியாவில் இல்லாத காரணத்தால் சீனாவில் செய்யப்பட்டது. சீனாவில் உள்ள ஜியாங்ஸி டொகைன் மெட்டல் கிராப்ட்ஸ் எனும் நிறுவனமதான் சிலைக்கு தேவையான 7000 வெண்கல தகடுகளை உருவாக்கிக் கொடுத்தது.


நமக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைத்துத் தந்த சீனா தங்கள் நாட்டுக்காக என்ன செய்துள்ளது தெரியுமா? உலகிலேயே மிகப்பெரிய பாலத்தை உருவாக்கியுள்ளது. அதுவும் சாதாரணப் பாலம் அல்ல, கடல்களுக்கு இடையில் செல்லும் 55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாலம். சீனாவில் உள்ள ஹாங்க் காஙகையும் மகாவையும் இணைக்கும் இந்த பாலம் 7 ஆண்டுகளில் ஈபிள் டவரில் உள்ளது போல 60 மடங்கு இரும்பைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது.

இதுதான் உண்மையான தேசபக்தி, இதைப்பார்த்துதான் நாம் பொறாமைப் படவேண்டும், இதைதான் நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.