1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (08:45 IST)

’ இந்தியாவின் பறக்கும் மனிதர்’ மில்கா சிங் காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படும் முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் நேற்று இரவு காலமானார்.

 
கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மில்கா சிங், சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். இதன் பின்னர் சமீபத்தில் அவருக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்து சண்டிகரில் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த சில நாள்களுக்கு முன்பு மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.