வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (18:08 IST)

இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா கோலி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய 3வது டி20 போட்டியில் விராட் கோலி 6 ரன்கள் அடிப்பதன் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார்.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  3 வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி 6 ரன்கள் அடிப்பதன் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார்.

6 ரன்கள் விராட் கோலி அடித்தால், டி-20 கிரிக்கெட்டில் உலக அளவில் 12,000 ரன்கள் அடித்த  4 வது வீரர் மற்றும் இந்திய அளவில் முதல் வீரர் என்ற சாதனை படைப்பார்.

இதற்கு முன்னதாக முதல் 3 இடங்களில் கிறிஸ்கெயில் 14,994 ரன்களுடன் முதலிடத்திலும், சோயிப்மாலிக் 12993 ரன்களுடன் 2வது இடத்திலும், கைரன் பொல்லார்டு 12,454 ரன்களுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.

கோலி 11,994 ரன்களுடன் இந்திய அளவில் முதலிடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 11,035 ரன்களுடன் 2 வது இடத்திலும் உள்ளனர்.