வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (20:42 IST)

கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பால் வாலிபர் மரணம்

utterpradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கிரிக்கெட் போட்டியில், ரன் எடுக்க ஓடியபோது பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வரருகிறது.

இங்கு, நொய்டாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், ரன் எடுப்பதற்காக ஓடியபோது  விகாஸ் நேகி(36) என்ற பொறியாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், மைதானத்தில் சரிந்த விழுந்த அவரை CPR முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.