1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli departed to indore from mumbai

இந்தூர் டி 20 போட்டிக்காக கிளம்பிய விராட் கோலி!

T20 Match
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி மொஹாலியில் நடந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த தொடருக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருந்தும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டி 20 போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் நாளை நடக்க உள்ள இரண்டாவது டி 20 போட்டியில் விளையாடுவதற்காக அவர் மும்பையில் இருந்து இந்தூர் கிளம்பி சென்று அணியுடன் இணைய உள்ளார்.

கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு அவர் டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்தியா கிரிக்கெட் க்ரவுண்டை குறை சொல்ல மாட்டோம்.. ஏன்னா..? – இங்கிலாந்து துணை கேப்டன் சொன்ன விளக்கம்!