ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (20:45 IST)

IND vs AFG- முதல் டி20 : இந்தியாவுக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு

afganisthan -india
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று  நடைபெற்று வரும் நிலையில்,  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், குர்பாச் 23 ரன்னும், ஜாட்ரன் 25 ரன்னும், ஓமர்சாய் 29 ரன்னும், முகமது  நபி 42 ரன்னும், நாஜ்புல்லா 19 ரன்னும் அடித்தனர்.  20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 159 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி சார்பில், முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.  சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது.