அடுத்த உலகக்கோப்பையில் தோனி விளையாட மாட்டார் – கவுதம் கம்பீர் கருத்து !

Last Modified செவ்வாய், 1 அக்டோபர் 2019 (12:02 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட மாட்டார் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி யுமான கவுதம் கம்பீர் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அதில் ‘ தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எந்த வொரு வீரரும் தன்னால் முடிந்த அளவுக்கு தன் உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு விளையாடலாம்.

தோனி 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடுவார் என நான் நினைக்கவில்லை. தோனிக்கு வாய்ப்பு அளிப்பதற்குப் பதிலாக இளம் வீரர்கள் ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கி வளர்க்கலாம். அதுவே சிறப்பான முடிவாக இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :