புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (15:29 IST)

நான்காம் இடப் பிரச்சனையை என்னால் தீர்க்க முடியும் – சுரேஷ் ரெய்னா உறுதி !

இந்திய அணியில் நான்காம் இடத்தில் யார் இறங்குவது என்பது குறித்து எழுந்துள்ள பிரச்சனையை எனது பேட்டிங்கால் தீர்க்க முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. 5,615 ஒருநாள் போட்டி ரன்களும், 1,605 டி20 சர்வதேச போட்டி ரன்களையும் குவித்துள்ள அவர் சில ஆண்டுகளாக பார்ம் அவுட் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அவர் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் இன்னமும் நான்காம் இடத்துக்குப் பொருத்தமானவன். என்னால் அந்த இடத்தில் சிறப்பாக விளையாட முடியும். டி 20 உலகக்கோப்பை வருவதால் அணியில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.