1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 பிப்ரவரி 2026 (13:54 IST)

இந்த 3 நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் இந்தியாவுடன் விளையாடுவோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில்

இந்த 3 நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் இந்தியாவுடன் விளையாடுவோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில்
பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. 
 
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் இந்தியாவுக்கு வர மறுத்த நிலையில், அதற்கு ஆதரவாக பாகிஸ்தானும் இந்தியாவுடன் விளையாடப்போவதில்லை என அறிவித்தது. இந்த சிக்கலைத் தீர்க்க லாகூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் தன் கோரிக்கைகளை முன்வைத்தது.
 
ஐசிசி வருவாயில் அதிகப்பங்கு, இந்தியாவுடன் இருதரப்பு தொடர்களை மீண்டும் தொடங்குவது மற்றும் கைகுலுக்கும் நெறிமுறையை அமல்படுத்துவது ஆகியவையே அந்த மூன்று கோரிக்கைகள். 
 
ஆசியக் கோப்பையின் போது பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இதனை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் மூன்றாவது கோரிக்கையை வைத்துள்ளது.
 
 இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால் ஐசிசிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்த அழுத்தத்தைத் தருகிறது. இருப்பினும், இருதரப்பு போட்டிகள் குறித்த முடிவு இரு நாட்டு அரசாங்கங்களின் கையில் உள்ளதால், ஐசிசி இதில் என்ன செய்யப்போகிறது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
 
Edited by Siva