வியாழன், 12 மார்ச் 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 பிப்ரவரி 2026 (19:43 IST)

இந்தியாவுடன் டி20 உலக கோப்பை!.. பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிப்பு?..

india pakistan
டி20 உலக கோப்பையில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் விதித்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூன்று நிபந்தனைகளை விதித்ததாக செய்திகள் வெளியானது..

தொடரின் வருவாயில் அதிக பங்கு, பாகிஸ்தான், வங்கதேசத்துடன் இந்தியா இருதரப்பு தொடரில் விளையாட வேண்டும், இந்தியா- பாகிஸ்தான்- வங்காளதேசம் இடையே முத்தரப்பு தொடரில் பங்கேற்க இந்தியா சம்மதம் தெரிவிக்க வேண்டும், போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்தியா கைகுலுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வைத்தது..

ஆனால், இவற்றை ஏற்க ஐசிசி மறுத்துவிட்டதாக தெரிகிறது. தங்களின் அதிகார வரம்பில் இந்த கோரிக்கைகள் வராது என ICC கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது..

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கையில் நடைபெறும் போட்டியில் வருகிற 15ம் தேதி இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதவிருந்தது.  இந்த நிலையில்தான் பாகிஸ்தான கிரிக்கெட் வாரியம் இந்த நிபந்தனைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது..