இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்குமா? நடக்காதா? பாகிஸ்தான் பிரதமர் சொன்னது என்ன?
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, வங்கதேச அணி இந்தியாவுக்கு வர மறுத்த விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவுடனான லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷவாஸ் ஷெரிப் அறிவித்திருந்தார்.
இந்த முடிவால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே கடும் இழுபறி நீடித்தது. ஐசிசியின் நெருக்குதல் மற்றும் இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் அரசு தனது புறக்கணிப்பு முடிவை தற்போது திரும்பப் பெற்றுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என்று பிரதமர் ஷவாஸ் ஷெரிப் உறுதிப்படுத்தியுள்ளார்.
விளையாட்டில் அரசியலை புகுத்தக் கூடாது என்றும், கிரிக்கெட் விளையாட்டின் மாண்பை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Edited by Siva