பவுலர்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்.. ரோஹித் ஷர்மாவுக்கு கவாஸ்கர் அறிவுரை!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. இந்த தொடர் ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணைக் கேப்டனாகியுள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். அதில் “இந்த தொடரில் ரோஹித் ஷர்மா பவுலர்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என ரோஹித் ஷர்மா நிரூபித்துள்ளார்.
தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடினால் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் விளையாடும் வீரர்களுக்கு பாரம் குறையும்” எனக் கூறியுள்ளார்.