வெள்ளி, 7 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (09:08 IST)

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

Champions Trophy

நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இறுதி போட்டிக்கு செல்லும் அணிகள் எவை என்று ரவி சாஸ்திரி மற்றும் பாண்டிங் தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர்.

 

9வது ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இறுதி போட்டிக்கு செல்லும் வல்லமை உள்ள அணிகள் குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரவி சாஸ்திரியும், ரிக்கி பாண்டிங்கும் தங்களது கணிப்புகளை தெரிவித்தனர். தங்களது கணிப்பின்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இறுதிப்போட்டி இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெறும் என்றும் கூறியுள்ளனர்.

 

Edit by Prasanth.K