1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. No captains photoshoot for ICC champions trophy

கேப்டன்கள் போட்டோஷூட் நிகழ்ச்சியையே ரத்து செய்த ஐசிசி… எல்லாத்துக்கும் காரணம் பிசிசிஐ தானா?

இந்தியா
அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இதையடுத்து இந்திய அணி ஜெர்ஸியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஐசிசி தலையீட்டால் பாகிஸ்தான் பெயரைப் பொறிக்க பிசிசிஐ ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் தொடர் தொடங்கும் முன் நடக்க இருந்த கேப்டன்கள் போட்டோஷூட்டுக்கு இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மாவை அனுப்ப முடியாது என பிசிசிஐ பிடிவாதமாக இருந்தது. அதனால் இப்போது அந்த போட்டோஷூட் நிகழ்வையே ஐசிசி ரத்து செய்துவிட்டது. தொடக்கவிழா மற்றும் தொடர் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னர் நடக்கவுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ரஞ்சி கோப்பையிலும் சொதப்பல்.. 6 ரன்களில் அவுட்டான விராத் கோஹ்லி..!